/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோகோகான் பயன்பாடு மாணவியர் விளக்கம்
/
கோகோகான் பயன்பாடு மாணவியர் விளக்கம்
ADDED : ஜன 26, 2026 05:12 AM
பொள்ளாச்சி: கோவை வேளாண் பல்கலை மாணவியர், கோகோகான் திரவம் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
கோவை தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நான்காம் ஆண்டு இளங்கலை பயிலும் மாணவியர், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் தங்கி ஊரக தோட்டக்கலை பயிற்சி பெற்று வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, மண்ணுார் விவசாயி கிருஷ்ணமூர்த்தி தோட்டத்தில், கோகோகான் தெளிப்பு முறை குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.
கோகோகான் என்பது ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு ஊக்கியாக தென்னை மரங்களுக்கு செயல்படும். இந்த கோகோகான் திரவம் வாயிலாக, தென்னை மகசூல், நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். நீண்ட கால பயிர் பாதுகாப்பு கிடைக்கும், என, மாணவியர் விளக்கம் அளித்தனர்.

