/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.எம்.எஸ்., பள்ளி இசைக்குழு மாநில அளவில் முதலிடம்
/
சி.எம்.எஸ்., பள்ளி இசைக்குழு மாநில அளவில் முதலிடம்
சி.எம்.எஸ்., பள்ளி இசைக்குழு மாநில அளவில் முதலிடம்
சி.எம்.எஸ்., பள்ளி இசைக்குழு மாநில அளவில் முதலிடம்
ADDED : அக் 28, 2024 11:58 PM
கோவை : கணபதி, சி.எம்.எஸ்., பள்ளியின் இசைக்குழு மாநில அளவில், முதலிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் மாவட்டங்களுக்கு இடையேயான இசைக்குழு போட்டி நாமக்கல் மாவட்டத்தில் நடந்தது. 14 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில், சி.எம்.எஸ்., பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளனர்.
இதையடுத்து, தமிழக அரசு சார்பில் தென் மாநிலங்களுக்கு இடையே நடக்கும் இசைக்குழு போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை, இப்பள்ளி இசைக்குழு மாணவர்கள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் ராஜகோபாலன், முதல்வர் ஸ்ரீப்ரியா உள்ளிட்டோர் பாராட்டினர்.