/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேகமாக பரவும் 'மம்ஸ்' குழந்தைகள் உஷார்
/
வேகமாக பரவும் 'மம்ஸ்' குழந்தைகள் உஷார்
ADDED : பிப் 28, 2024 12:04 AM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வேகமாக பரவிவரும் 'மம்ஸ்' என்னும் அம்மை நோயினால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பள்ளி செல்லும் குழந்தைகள் 'மம்ஸ்' என்னும் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மம்ஸ் நோயினால் பெரியவர்களை விட குழந்தைகளே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காரமடை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம் கூறியதாவது:
மம்ஸ் நோய் ஏற்பட வைரஸ் தான் காரணம். இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் தன்மை கொண்டது. இந்நோயின் பாதிப்பு ஐந்து நாட்கள் வரையில் காணப்படும். ஆரம்பத்தில் காய்ச்சல் ஏற்பட்டு, கீழ் கன்னம் மற்றம் கழுத்து பகுதியில் வலியுடன் வீக்கம் ஏற்படும். நோயின் தாக்கம் தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
எம்.எம்.ஆர்.,என்னும் தடுப்பூசியை
போட்டுக்கொண்டால் மம்ஸ் பரவாமல் தடுக்கலாம். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும். மேலும், துாய்மையை கடைப்பிடிப்பதால் மட்டுமே மம்ஸ் நோய் பரவாமல் தடுக்க முடியும்.
மேட்டுப்பாளையத்தில் தினமும் 5 முதல் 6 குழந்தைகள் வரை மம்ஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
----

