/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மன்னீஸ்வரர் கோவிலில் ஜன.,10ல் தேரோட்டம்
/
மன்னீஸ்வரர் கோவிலில் ஜன.,10ல் தேரோட்டம்
ADDED : டிச 15, 2024 11:38 PM

அன்னுார்; வரும் ஜன. 10ம் தேதி தேரோட்டம் நடத்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் 25வது ஆண்டாக தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் கோவில் வளாகத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது.
அறங்காவலர் குழுத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வரும் ஜன. 4ம் தேதி காலை கொடியேற்றம் நடத்துவது, 8ம் தேதி வரை, தினமும் சூரிய வாகனம், சந்திர வாகனம், பூத வாகனம், புஷ்ப பல்லக்கு ஆகியவற்றில் சுவாமி திரு மீது விழா நடத்துவது, 9ம் தேதி காலை சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. 10ம் தேதி காலை 10:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. 11ம் தேதி குதிரை வாகனத்திலும், 12ம் தேதி தெப்பத்திலும் சுவாமி உலா வருகிறார்.
10 நாட்களும் ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி, வள்ளி கும்மி ஆட்டம், கம்பத்தாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் அறங்காவலர்கள் மணி, சங்கரன், முன்னாள் அறங்காவலர் ரங்கசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

