ADDED : பிப் 02, 2024 12:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். மத்திய இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில் இதற்கு தடுப்பூசி திட்டம் குறித்து தெரிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி. மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தொழில் துவங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஸ்ரீதேவி, ராம்நகர்.
சோலார் பயன்பாட்டை ஊக்குவிக்க 300 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்துள்ளனர். இயற்கை பாதுகாப்பில் இந்த அறிவிப்பு மறைமுகமாக முங்கிய பங்கு வகிக்கும். மேலும், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தொழில் துவங்க உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
-கார்த்திகா, சரவணம்பட்டி

