/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவினாசிலிங்கம் பல்கலையில் பாரதியார் பிறந்த நாள் விழா
/
அவினாசிலிங்கம் பல்கலையில் பாரதியார் பிறந்த நாள் விழா
அவினாசிலிங்கம் பல்கலையில் பாரதியார் பிறந்த நாள் விழா
அவினாசிலிங்கம் பல்கலையில் பாரதியார் பிறந்த நாள் விழா
ADDED : டிச 13, 2025 06:34 AM

கோவை: அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனம் தமிழ்த்துறையின் சார்பில், பாரதியார் பிறந்தநாள் விழா, துணை வேந்தர் பாரதி ஹரிசங்கர் தலைமையில் நடந்தது.
'வருங்காலம் கூறிய தீர்க்க தரிசியான பாரதியின் கருத்துக்களை, இலக்கிய உணர்வோடு வாழ்க்கையில் எடுத்துச் செல்லுங்கள்' என்று, அவர் மாணவியருக்கு அறிவுறுத்தினார்.
கவிஞர் ரவி சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகச்சிறந்த கவிஞர் பாரதியார். நாட்டுக்காகவும், பெண் விடுதலைக்காகவும், பெண் கல்விக்காகவும் தன் கவித்துவத்தின் மூலம் போராடிய போராளி. சாதி, மத பேதமின்றி, தன் உயிர் போல் பிற உயிர்களையும் பேணுகின்ற, மானுடப்பண்பை வளர்த்தவன் பாரதி,'' என புகழ்ந்தார்.
கலை மற்றும் சமூக அறிவியல் டீன் சசி பிரபா ஜெயின், தமிழ்த்துறையின் தலைவர் முனைவர் பிரியதர்சினி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

