/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளை ஈ பாதிப்பு தடுக்க விழிப்புணர்வு
/
வெள்ளை ஈ பாதிப்பு தடுக்க விழிப்புணர்வு
ADDED : மே 01, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி வாணவராயர் வேளாண் கல்லுாரி நான்காமாண்டு மாணவியர், கிராம தங்கல் திட்டத்தின் கீழ், பல்வேறு வேளாண் செயல்முறை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆனைமலை சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு செல்லும் மாணவியர், விவசாயிகளை நேரடியாக சந்தித்தனர்.
அவர்களிடையே, தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து விளக்கினர். குறிப்பாக, மஞ்சள் நிற ஒட்டும் பொறி, விசை தெளிப்பான் வாயிலாக தண்ணீரைப் பீய்ச்சி அடித்தல், வேப்ப எண்ணெய் கரைசல் தெளித்தல், என்கார்சியா ஒட்டுண்ணி கட்டுதல், கரும்பூஞ்சானை தடுக்க மைதா கரைசல் பயன்பாடு குறித்து செயற்முறை விளக்கம் அளித்தனர்.

