/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏ.டி.எம். மிஷின் மக்கர் வாடிக்கையாளர்கள் விரக்தி
/
ஏ.டி.எம். மிஷின் மக்கர் வாடிக்கையாளர்கள் விரக்தி
ADDED : நவ 05, 2025 09:57 PM

வால்பாறை: வால்பாறையில், வங்கி ஏ.டி.எம்., மிஷின்கள் பழுதானதால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
வால்பாறை நகரில் உள்ள, எஸ்.பி.ஐ., வங்கியில் சமீப காலமாக ஏ.டி.எம்., மிஷின் மற்றும் வங்கி கணக்கு பதிவு செய்யும் இயந்திரம் பழுதான நிலையில் உள்ளதால், வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர்.
கடந்த இரண்டு நாட்களாக, ஏ.டி.எம்., மிஷின் பழுதானதால் வாடிக்கையாளர்கள் பணம் பெற முடியாமல் அவதிப்பட்டனர்.
வாடிக்கையாளர்கள் கூறுகையில், 'எஸ்.பி.ஐ.,யில் அடிக்கடி ஏ.டி.எம்., மிஷின் பிரச்னை ஏற்படுகிறது. மூன்று ஏ.டி.எம். மிஷினில், இரண்டு மட்டுமே செயல்படுகிறது. ஒரு மிஷன் பல ஆண்டுகளாக பழுதான நிலையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஏ.டி.எம்., செயல்படாததால், வாடிக்கையாளர்களும், சுற்றுலா பயணியரும் பணம் எடுக்க முடியவில்லை,' என்றனர்.
வங்கி அதிகாரிகளிடம் கேட்ட போது,'பழைய ஏ.டி.எம். மிஷின் பழுதானதை தொடர்ந்து புதியதாக ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்., மிஷின் திடீரென பழுதானகியுள்ளது. கோவையிலிருந்து மெக்கானிக் வந்த பின் சரி செய்யப்படும்.
வாடிக்கையாளர் வசதிக்காக கூடுதலாக புதிய ஏ.டி.எம்., மிஷின் வைக்கப்பட்டுள்ளது. மிஷின் சரி செய்யும் வரை வங்கியில் நேரடியாக வாடிக்கையாளர்கள் பணத்தை பெறலாம். இது தவிர, நடமாடும் ஏ.டி.எம்.,வாயிலாக எஸ்டேட் பகுதியிலேயே பணம் பெறலாம்,' என்றனர்.

