/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலெக்டர் அலுவலகத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி கூட்டம்
/
கலெக்டர் அலுவலகத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி கூட்டம்
ADDED : ஜூலை 25, 2025 09:23 PM
கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில்ஆசிய வளர்ச்சி வங்கி குழு மற்றும் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கபணிக்குழு கூட்டம் நடந்தது.
கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் உயிரி பூங்கா, உக்கடம் ஏரியில் மிதக்கும் சூரிய சக்தி பேனல்கள்,
நீர்நிலை மறுசீரமைப்பு, மாநகராட்சி பகுதிகளில் 24*7 குடிநீர் திட்டப்பணி, திடக்கழிவு மேலாண்மை,உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்துவிவாதிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ஆசிய வளர்ச்சி வங்கி குழு மற்றும் தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற பணிக்குழு ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை, உக்கடம் ஏரியில் மிதக்கும் சூரிய சக்தி பேனல்கள், செம்மொழி பூங்கா, உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் மாநகராட்சி கமிஷனர், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)சங்கேத் பல்வந்த் வாகே, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் , பசுமை தோழர் ராகினி, ஏசியன் வளர்ச்சி வங்கி நிர்வாகிகள் உள்ளிட்டஅரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

