sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நாள் முழுவதும் அன்னதான திட்டம்

/

நாள் முழுவதும் அன்னதான திட்டம்

நாள் முழுவதும் அன்னதான திட்டம்

நாள் முழுவதும் அன்னதான திட்டம்


ADDED : டிச 11, 2024 09:43 PM

Google News

ADDED : டிச 11, 2024 09:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக முதல்வர் சட்டசபையில், 2023 - 24ம் ஆண்டு அறிவித்தது படி, மாசாணியம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம், கடந்த ஜன., மாதம் முதல் நடைபெறுகிறது. அன்பர்கள், பிறந்த நாள், மண நாள், மனைவி, பெற்றோர் பிறந்த நாள் போன்ற முக்கிய நாட்களிலும், அவரவர் விரும்பும் நாட்களிலும் அன்னதானம் செய்யலாம்.

இத்திட்டத்தில், 100 பேருக்கு, 3,500 ரூபாய் வீதம் செலுத்தி அன்னதானம் செய்யலாம். அன்னதானத்துக்கு வழங்கப்படும் தொகைக்கு (வருமான வரி சட்டப்பிரிவு 80ஜி படி) வருமான வரி விலக்கு உண்டு. கட்டளைதாரராக விரும்புவோர், 75,000 ரூபாய் செலுத்தினால், ஆண்டுக்கு ஒரு முறை அவர் விரும்பும் நாளில், 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும்.

நன்கொடை அனுப்ப வேண்டிய முகவரி, நிர்வாகி, அன்னதான திட்டம், மாசாணி அம்மன் கோவில், ஆனைமலை.

Website: www.hrce.tn.gov.in/hrce

Email : masaniammantemple@gmail.com என்ற இணையதளங்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தை மேலும் விபரங்களுக்கு அணுகலாம்.

நன்கொடடை, அன்னதானம், அபிேஷகம், தங்கத்தேர் உலாவில் பங்கேற்க விருப்பம் உள்ளோர், இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், கோவிலில் பக்தர்களின் பங்களிப்போடு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம், கடந்த, 2022ம் ஆண்டு, நவ.,1ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு நன்கொடை மற்றும் காணிக்கை பொருட்களை கோவில் அலுவலகத்தில் வழங்கலாம்.

ஆன்மிக புத்தக மையம்


கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஆன்மிக புத்தகங்களை வாங்கும் வகையில், கோவில் வளாகத்தில் ஆன்மிக புத்தக மையம் செயல்படுகிறது. இங்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை வெளியீடுகள் கிடைக்கும். பக்தர்கள் வாங்கி பயன்பெறலாம்.

மருத்துவ மையம்


கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ சேவை மையம் செயல்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவில்கள் குறித்த செயலி

தமிழகத்தின் புகழ்பெற்ற கோவில்களின் தகவல் மற்றும் சேவைகளை எளிதில் அறிந்து பயன்படுத்திக்கொள்ளும் வகையில், ஹிந்துசமய அறநிலையத்துறையால், 'திருக்கோவில்' எனும் மொபைல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இச்செயலி வாயிலாக, தலவரலாறு, பூஜை நேரங்கள், கட்டண விபரங்கள், திருவிழா, கோவில் கூகுள் வழிகாட்டி, அன்னதானம், திருப்பணி, நன்கொடை செலுத்தும் வசதி, பக்தர்களுக்கான வசதிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.இச்செயலியை ஆன்டிராய்டு மொபைல்போன்களில், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும், ஐ.ஓ.எஸ்., மொபைல் போன்களில், ஆப்ஸ் ஸ்டோரில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.








      Dinamalar
      Follow us