/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலை டிப்ளமோ கவுன்சிலிங்; பாடம், கல்லுாரியை மாற்ற அவகாசம்
/
வேளாண் பல்கலை டிப்ளமோ கவுன்சிலிங்; பாடம், கல்லுாரியை மாற்ற அவகாசம்
வேளாண் பல்கலை டிப்ளமோ கவுன்சிலிங்; பாடம், கல்லுாரியை மாற்ற அவகாசம்
வேளாண் பல்கலை டிப்ளமோ கவுன்சிலிங்; பாடம், கல்லுாரியை மாற்ற அவகாசம்
ADDED : ஜூலை 24, 2025 08:43 PM
கோவை; வேளாண் பல்கலையில் பட்டயப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில், விருப்பப் பாடம் மற்றும் கல்லுாரியை மாற்றிக் கொள்ள பல்கலை சார்பில் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை டீன் வெங்கடேச பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
பல்கலையில் பயிற்றுவிக்கப்படும், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டயபடிப்புகளுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில், 1,878 விண்ணப்பங்கள் தகுதியானவையாக ஏற்கப்பட்டன. பட்டயப்படிப்புகளுக்கான இணையதள கலந்தாய்வு, வரும் 28ம் தேதி மாலை 5:00 மணி வரை நடக்கிறது.
விண்ணப்பதாரர்கள் http://tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் தங்களுடைய தரவுகளை பயன்படுத்தி, தங்களின் கல்லுாரி மற்றும் பாட விருப்பங்களை மாற்றிக்கொள்ளலாம். கடைசியாக உறுதி செய்யப்பட்ட மாணவர்களுடைய விருப்பங்கள், கல்லுாரி மற்றும் பாடங்கள் இட ஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்படும்.
கலந்தாய்வின்போது விண்ணப்பதாரர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. சான்றிதழ் சரிபார்ப்பின் போது கட்டணம் பெற்றுக்கொள்ளப்படும்.
அப்போது, கலந்தாய்வுக் கட்டணமாக, ரூ.200, பட்டியலின மற்றும் பழங்குடி இன மாணவர்கள் ரூ. 100 செலுத்த வேண்டும். சேர்க்கை பெற்றவர்கள், சேர்க்கையை உறுதி செய்ய, ரூ.5,000 இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களை இணையதளம் வாயிலாகவும், 9488635077, 9486425076 என்ற எண்களிலும் தெரிந்து கொள்ளலாம்.