/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்ணீரை காய்ச்சி குடிக்க அறிவுரை
/
தண்ணீரை காய்ச்சி குடிக்க அறிவுரை
ADDED : நவ 12, 2025 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்திற்கு நீராதாரமாக சிறுமுகை அருகே உள்ள மூலையூரில், பவானி ஆற்றின் அருகே கிணறு அமைத்து, தண்ணீர் எடுத்து, மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் வாயிலாக ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பவானி ஆற்று நீர் மண் கலந்து செந்நிறமாக செல்கிறது. இதனால் கிராமங்களில் குடிநீரை காய்ச்சி குடிக்க மக்களுக்கு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர்.---

