/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
5வது டிவிஷன் கிரிக்கெட் 60 ரன் அடித்த ஆதித்யா
/
5வது டிவிஷன் கிரிக்கெட் 60 ரன் அடித்த ஆதித்யா
ADDED : செப் 07, 2025 07:29 AM
கோவை ': கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.,) சார்பில் ஐந்தாவது டிவிஷன் போட்டி, பி.எஸ்.ஜி., - ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. ஜி கிரிக்கெட் கிளப் அணியும், வசந்தம் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.
முதலில் 'பேட்டிங்' செய்த ஜி கிரிக்கெட் கிளப் அணியினர், 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 196 ரன் எடுத்தனர். வீரர்கள் ஆதித்யா 60 ரன், நஞ்சுண்டேஸ்வரன் 55 ரன், சத்யன் 46 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் விக்னேஷ் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து களம் இறங்கிய வசந்தம் கிரிக்கெட் கிளப் அணியினர், 48 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 175 ரன் எடுத்தனர். வீரர் கார்த்திகைசெல்வன் 61 ரன் எடுத்தார். எதிரணி வீரர்களான ஆதித்யா நான்கு விக்கெட்களும், அசாருதின் மூன்று விக்கெட்களும் வீழ்த்தினர்.