/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விசாரணை கைதிகளிடம் பேச வக்கீல்களுக்கு கூடுதல் நேரம்
/
விசாரணை கைதிகளிடம் பேச வக்கீல்களுக்கு கூடுதல் நேரம்
விசாரணை கைதிகளிடம் பேச வக்கீல்களுக்கு கூடுதல் நேரம்
விசாரணை கைதிகளிடம் பேச வக்கீல்களுக்கு கூடுதல் நேரம்
ADDED : அக் 02, 2024 07:40 AM

கோவை: கோவை மத்திய சிறையில், விசாரணை கைதிகளை சந்தித்து பேச வக்கீல்களுக்கு கூடுதல் நேரம் அனுமதி அளிக்கப்படுகிறது.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளை, வழக்கு சம்பந்தமாக அவரது சார்பில் ஆஜராகும் வக்கீல்கள் சந்திப்பது வழக்கம்.
இதற்காக, கோவை மத்திய சிறைக்கு செல்லும் வக்கீல்கள், கைதிகளை சந்திக்க பிற்பகல் 3:00 முதல் 5:00 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டு வந்தது. சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, கைதிகளை சந்திக்கலாம்.
இந்நிலையில், கைதிகளை சந்திக்க வக்கீல்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்க கோரி, சிறை அதிகாரிகளிடம் வக்கீல் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, விசாரணை கைதிகளை சந்திக்க மதியம் 12:00 முதல் மாலை 5:00 மணி வரை நேரம் ஒதுக்கி, சிறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கூடுதலாக மூன்று மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
அதே போல, வக்கீல்கள் முன் பதிவு செய்து கைதிகளை சந்திப்பது தொடர்பாக, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

