/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்துகளை தவிர்க்க குவி கண்ணாடி :சாம்பமூர்த்தி நகர் மக்கள் நடவடிக்கை
/
விபத்துகளை தவிர்க்க குவி கண்ணாடி :சாம்பமூர்த்தி நகர் மக்கள் நடவடிக்கை
விபத்துகளை தவிர்க்க குவி கண்ணாடி :சாம்பமூர்த்தி நகர் மக்கள் நடவடிக்கை
விபத்துகளை தவிர்க்க குவி கண்ணாடி :சாம்பமூர்த்தி நகர் மக்கள் நடவடிக்கை
ADDED : பிப் 07, 2024 12:17 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு மேம்பாலத்தின் கீழே விபத்துகளை தடுக்க, குடியிருப்போர் சங்கம் சார்பில், குவி கண்ணாடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், சாம்பமூர்த்தி நகர் குடியிருப்பு பகுதி உள்ளது. பாலக்காடு ரோடு மேம்பாலத்தின் கீழ் உள்ள குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வாகனங்கள், சந்திப்பு பகுதிகளில் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது.
இதை தவிர்ப்பதற்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என, சாம்பமூர்த்தி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர்.
அதன்படி, பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு மேம்பாலத்தின் கீழே, ரோடு சந்திப்பு பகுதி மற்றும் சாம்பமூர்த்தி நகர் குடியிருப்பு பகுதிக்கு நுழையும் பகுதியிலும், இரண்டு குவி கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறுகையில், 'சாம்பமூர்த்தி நகர் நுழைவுவாயில் மற்றும் பாலத்தின் கீழ் பகுதியிலும், இரண்டு குவி கண்ணாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் வருவதை தெரிந்து கொண்டு, வாகன ஓட்டுநர்கள் கவனத்துடன் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனால், விபத்துகளை கட்டுப்படுத்தலாம் என்பதால் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நெடுஞ்சாலைத் துறை, நகராட்சியில் முறையாக அனுமதி பெற்று இந்த குவி கண்ணாடி அமைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

