/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கான்ட்ராக்டரிடம் ரூ.78 லட்சம் சுருட்டிய கணக்காளர் சிக்கினார்
/
கான்ட்ராக்டரிடம் ரூ.78 லட்சம் சுருட்டிய கணக்காளர் சிக்கினார்
கான்ட்ராக்டரிடம் ரூ.78 லட்சம் சுருட்டிய கணக்காளர் சிக்கினார்
கான்ட்ராக்டரிடம் ரூ.78 லட்சம் சுருட்டிய கணக்காளர் சிக்கினார்
ADDED : ஆக 05, 2025 05:54 AM

கோவை: ஒப்பந்ததாரரிடம், 78 லட்சம் ரூபாயை மோசடி செய்த ஊழியர் சிக்கினார்.
கோவை மாவட்டம், செட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் கலைவாணி, 42; பாரதி கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்ற நிறுவனம் நடத்துகிறார். இந்நிறுவனத்தில், கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ராஜன், 51, வங்கி கணக்குகளை நிர்வகித்து வந்தார். நீலகிரி, சோலுார் பேரூராட்சியில் இருந்து வந்த, 78 லட்சம் ரூபாய் மற்றும் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தையும் சேர்த்து மொத்தம், 1.11 கோடி ரூபாய் பணத்தை, ராஜன் தன் மனைவி, நண்பர்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்திருப்பது தெரிந்தது.
இதுகுறித்து கேட்ட போது, ராஜன், 33.22 லட்சம் ரூபாயை கொடுத்து விட்டு, மீதி பணத்தை திருப்பி தரவில்லை. கலைவாணி, கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், ராஜனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.