/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கள்ளக்காதலி பிரிந்து சென்ற சோகத்தில் மது குடித்த வாலிபர் தடுக்கி விழுந்து பலி

ADDED : ஏப் 04, 2025 11:46 PM
கோவை; சிவகங்கை, மாவட்டம் காளையார் கோயிலை சேர்ந்தவர் கோபி, 20; பீளமேடு பகுதியில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு சிவகங்கையை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்பெண்ணை கோவை பீளமேட்டில் தான் தங்கியிருக்கும் அறைக்கு அழைத்து வந்தார்.
இதனிடையில், தனது மனைவியை காணவில்லை என, அப்பெண்ணின் கணவர் சிவகங்கை மாவட்ட டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்த போது, அப்பெண் கோவையில் கோபியுடன் தங்கியிருப்பது தெரியவந்தது. போலீசார் கோபி மற்றும் பெண் இருவரையும் விசாரணைக்காக சிவகங்கை அழைத்து சென்றனர். பெண்ணை அவரின் தாயாருடன் அனுப்பி வைத்தனர்.
இதனால், மனமுடைந்த கோபி தினமும் மது குடித்து வந்துள்ளார். கடந்த 1ம் தேதி அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார். பின்னர், பீளமேடு ராஜூ நாயுடு லே அவுட் அருகில் உள்ள ரயில்வே டிராக்கில் நடந்து சென்ற போது தடுக்கி விழுந்தார்.
தகவல் அறிந்து வந்த கோபியின் நண்பர்கள், அவரை அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்தனர். மறுநாள் காலையில் கோபி அசைவின்றி இருந்ததால், அவரை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.