/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைக்கால பாதிப்புகளை தவிர்க்க 660 மீ.,க்கு 'கான்கிரீட்' வடிகால்
/
மழைக்கால பாதிப்புகளை தவிர்க்க 660 மீ.,க்கு 'கான்கிரீட்' வடிகால்
மழைக்கால பாதிப்புகளை தவிர்க்க 660 மீ.,க்கு 'கான்கிரீட்' வடிகால்
மழைக்கால பாதிப்புகளை தவிர்க்க 660 மீ.,க்கு 'கான்கிரீட்' வடிகால்
ADDED : பிப் 03, 2024 12:53 AM
கோவை;மழைக்கால பாதிப்புகளை தவிர்க்க, சேத்துமா வாய்க்காலுடன் இணையும் விதமாக, 660 மீ.,புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப்படவுள்ளது.
பேரூர் படித்துறையை கடக்கும் தண்ணீர், ஆண்டிப்பாளையம் பிரிவில் இருந்து பிரிந்து சேத்துமா வாய்க்கால் வழியாக, உக்கடம் பெரிய குளத்தை அடைய வேண்டும். ஆனால், புற்கள், பிளாஸ்டிக் கழிவுகளால் தண்ணீர் பயணிப்பது தடைபடுகிறது.
அடிக்கடி துார்வாரப்படாததால்,மழை காலங்களில் அப்பகுதி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுவது தொடர்கதையாக உள்ளது.
மாநகராட்சி, 79வது வார்டு பேரூர் பிரதான சாலை, அண்ணா சாலை பகுதியில் மழை காலங்களில் சேகரமாகும் மழைநீர், குறுகலான சாலை வழியாக ஏற்கனவே உள்ள வடிகால் வாயிலாக, சேத்துமா வாய்க்காலில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஆனால், அந்த வடிகாலின் கொள்ளளவு சிறிதாக இருப்பதால் அதிகமான மழைநீரை வெளியேற்ற முடியாமல், வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலைப்பகுதி சேறும், சகதியுமாக மாறுவதால், மக்கள் அவஸ்தைப்படுகின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பேரூர் மெயின் ரோடு, சிவாலயா சந்திப்பில் உள்ள மழைநீர் வடிகாலுக்கும், சுண்டக்காமுத்துார் ரோட்டில் உள்ள சேத்துமா வாய்க்கால் இணைப்பு வடிகாலுக்கும் இடையே சுமார், 6 அடி வாட்டம் அமைந்துள்ளது.
சமீபத்தில் ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர், இதனால் மழைகாலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து, இப்பகுதியில், 660 மீ.,துாரத்துக்கு கான்கிரீட் மழைநீர் வடிகால் மற்றும் தேவைப்படும் இடங்களில், சிறுபாலங்கள் அமைக்கப்படவுள்ளன' என்றனர்.

