/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுார் வட்டாரத்திலிருந்து 2,000 பா.ஜ.,வினர் பங்கேற்பு
/
அன்னுார் வட்டாரத்திலிருந்து 2,000 பா.ஜ.,வினர் பங்கேற்பு
அன்னுார் வட்டாரத்திலிருந்து 2,000 பா.ஜ.,வினர் பங்கேற்பு
அன்னுார் வட்டாரத்திலிருந்து 2,000 பா.ஜ.,வினர் பங்கேற்பு
ADDED : பிப் 27, 2024 11:18 PM
அன்னுார்;அன்னுார் வட்டாரத்தில் இருந்து பா.ஜ., பல்லடம் மாநாட்டில் 2,000 பா.ஜ.,வினர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி பங்கேற்ற பா.ஜ., மாநாடு பல்லடத்தில் நேற்று நடந்தது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் யாத்திரை நிறைவு விழாவை முன்னிட்டு நடந்த இந்த மாநாட்டில் அன்னுார் வட்டாரத்திலிருந்து 2000 பேர் பங்கேற்றனர்.
அன்னுார் வடக்கு ஒன்றியத்தில் 11 ஊராட்சிகள் மற்றும் அன்னுார் பேரூராட்சி, தெற்கு ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகள் ஆகியவற்றிலிருந்து, ஆறு பஸ்கள், 40 வேன்கள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் நேற்று காலை 11:00 மணிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் அவிநாசி ரோட்டில் உள்ள மகரிஷி மகால் மண்டபத்திலிருந்து மோடியை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பியபடி புறப்பட்டுச் சென்றனர். பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார், முருகேசன், சக்தி கேந்திர பொறுப்பாளர் நடராஜன் உள்ளிட்டோ பங்கேற்றனர்.
தெற்கு ஒன்றியம் சார்பில் எல்லபாளையத்தில் உள்ள பா.ஜ., வடக்கு மாவட்ட அலுவலகத்தில் இருந்து தெற்கு ஒன்றிய தலைவர் ரத்தினசாமி தலைமையில் பா.ஜ.,வினர் புறப்பட்டுசென்றனர்.

