/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டிக்கு நெரிசல் பயணம்: சிறப்பு பஸ் இயக்கப்படுமா!
/
ஊட்டிக்கு நெரிசல் பயணம்: சிறப்பு பஸ் இயக்கப்படுமா!
ஊட்டிக்கு நெரிசல் பயணம்: சிறப்பு பஸ் இயக்கப்படுமா!
ஊட்டிக்கு நெரிசல் பயணம்: சிறப்பு பஸ் இயக்கப்படுமா!
ADDED : ஏப் 28, 2024 09:14 PM
மேட்டுப்பாளையம்:கோடை சீசன் துவங்கியதை அடுத்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்க, சுற்றுலாப் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை சீசனும் துவங்கி உள்ளது. அதனால் வெளியூர்களில் இருந்து ஏராளமான மக்கள், ஊட்டிக்கு சுற்றுலா சென்று வருகின்றனர்.
ஈரோடு, சத்தியமங்கலம், திருப்பூர், கோவை ஆகிய ஊர்களில் இருந்து, ஊட்டிக்கு பஸ்கள் நேரடியாக இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் புறப்படும் இடத்திலேயே, கூட்டம் நிரம்பி வழிகிறது. இவை மேட்டுப்பாளையம் வழியாக, ஊட்டிக்கு செல்கின்றன.
வெளியூர்களிலிருந்து மேட்டுப்பாளையம் வந்து, இங்கிருந்து ஊட்டிக்கு செல்ல, ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். ஆனால், வெளியூர்களில் இருந்து மேட்டுப்பாளையம் வரும், அனைத்து ஊட்டி செல்லும் பஸ்களிலும் கூட்டம் நிரம்பி உள்ளதால், பஸ்சில் நின்று பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மலைப்பாதையில் பஸ்கள் வளைந்து நெளிந்து செல்வதால், இரண்டு, மூன்று மணி நேரம் நின்று பயணம் செய்ய பயணியர் சிரமப்படுகின்றனர்.
கோடை சீசனை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்.
இவ்வாறு, சுற்றுலா பயணியர் கூறினர்.

