/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2ம் தவணை பள்ளி மானியம் எப்போது? தலைமையாசிரியர்கள் எதிர்பார்ப்பு தலைமையாசிரியர்கள் எதிர்பார்ப்பு
/
2ம் தவணை பள்ளி மானியம் எப்போது? தலைமையாசிரியர்கள் எதிர்பார்ப்பு தலைமையாசிரியர்கள் எதிர்பார்ப்பு
2ம் தவணை பள்ளி மானியம் எப்போது? தலைமையாசிரியர்கள் எதிர்பார்ப்பு தலைமையாசிரியர்கள் எதிர்பார்ப்பு
2ம் தவணை பள்ளி மானியம் எப்போது? தலைமையாசிரியர்கள் எதிர்பார்ப்பு தலைமையாசிரியர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 24, 2024 09:47 PM
பொள்ளாச்சி : அரசு பள்ளிகளுக்கான இரண்டாம் தவணை பராமரிப்பு நிதி, எப்போது கிடைக்கும் என, பள்ளித் தலைமையாசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த, மத்திய மனித வள மேம்பாட்டு துறை ஆண்டுதோறும் நிதி ஒதுக்குகிறது. அவ்வகையில், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மானியம் நிர்ணயிக்கப்படுகிறது.
இதன்படி, 1 முதல் 30 மாணவர்கள் கொண்ட பள்ளிக்கு, 10 ஆயிரம்; 31 முதல், 100 மாணவர்கள் படித்தால், 25 ஆயிரம் ரூபாய்; 101 முதல் 250 மாணவர்கள் படித்தால், 50 ஆயிரம்; 251 முதல் ஆயிரம் மாணவர்கள் கொண்ட பள்ளிகளுக்கு, 75 ஆயிரம் மற்றும் ஆயிரத்துக்கும் மேல் மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டிற்கு, 126.45 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே 50 சதவீதம் பள்ளி மானியம் விடுவிக்கப்பட்டது. அதற்கேற்ப பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் பயனடைந்தன.
மீதமுள்ள 50 சதவீதம் தொகை, இம்மாதம், பள்ளிக் கல்வி இயக்குனரின் வங்கிக் கணக்கிற்கு விடுவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில், இரண்டாம் தவணை பராமரிப்பு நிதி, எப்போது வந்து சேரும் என, பள்ளித் தலைமையாசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
பள்ளி மானியம் பெறப்பட்டால், பிராட்பேண்ட் இணைப்பு சேவைக்கான தொகையை அளிக்க முடியும். அதேபோல, ஏற்கனவே, பள்ளி பராமரிப்புக்கு மேற்கொண்ட பணிக்கான 'பில்' இருந்தால், அதற்கான தொகையையும் எடுத்துக் கொள்ளலாம்.
பராமரிப்பு பணிக்கான தொகையை செலவிடத் தேவையில்லை எனறால், அடுத்த கல்வியாண்டுக்கான பராமரிப்பு பணிக்கு வைத்துக் கொள்ளலாம். எனவே, இரண்டாம் தவணை பள்ளி மானியம் எப்போது கிடைக்கும் என, எதிர்பார்க்க வேண்டியுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

