/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம கோவில் பூசாரிகள் பேரவை கூட்டம்
/
கிராம கோவில் பூசாரிகள் பேரவை கூட்டம்
ADDED : ஏப் 03, 2024 01:36 AM

தொண்டாமுத்தூர்:தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத்தின், கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் தொண்டாமுத்தூர் வட்ட பொதுக்குழு கூட்டம், பூலுவபட்டியில் உள்ள மாகாளி அம்மன் கோவிலில் நடந்தது.
இக்கூட்டத்தில், பேரவையின் கோவை மாவட்ட கோட்ட இணை அமைப்பாளர் கோபால் வரவேற்புரையாற்றினார். விஷ்வ ஹிந்து பரிஷத்தின், மாநில இணை பொதுச் செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
இதில், இந்ரேஸ்வர மடாலயம் ஸ்ரீ ராஜா தேவேந்திர சுவாமிகள் சிறப்புரையாற்றினார்.
போதை கலாசாரத்தை அடியோடு ஒழிக்க, அதில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்து, அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அரசுடமையாக்க வேண்டும், கிராம கோவில் பூசாரிகளுக்கு, தற்போது வழங்கி வரும் 4000 ரூபாய் உதவித்தொகை மற்றும் ஓய்வூதியத்தை, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட, பேரவையின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆதரவளிக்கும் கட்சிக்கு, லோக்சபா தேர்தலில் ஆதரவு அளிப்பது என்பது உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

