/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பலத்த காற்றுக்கு சாய்ந்த மரங்கள்; ஆனைமலை ரோட்டில் நெரிசல்
/
பலத்த காற்றுக்கு சாய்ந்த மரங்கள்; ஆனைமலை ரோட்டில் நெரிசல்
பலத்த காற்றுக்கு சாய்ந்த மரங்கள்; ஆனைமலை ரோட்டில் நெரிசல்
பலத்த காற்றுக்கு சாய்ந்த மரங்கள்; ஆனைமலை ரோட்டில் நெரிசல்
ADDED : மே 27, 2024 12:42 AM

ஆனைமலை:ஆனைமலை அருகே, பலத்த காற்றுக்கு ரோட்டில் மரங்கள் சாய்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்றுப் பகுதிகளில், கடந்த சில வாரங்களாக மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டது.
கடந்த, இரண்டு நாட்களாக மழைப்பொழிவு இல்லாமல், பலத்த காற்று வீசி வருகிறது. நேற்று ஆனைமலை பகுதியில் பலத்த காற்று வீசியதில், ஆனைமலை - சேத்துமடை ரோடு மற்றும் பெத்தநாயக்கனுார் ரோடுகளில், புளிய மரங்கள் சாய்ந்தன.
இவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மரங்களை அப்புறப்படுத்தினர்.