/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரத்தை வெட்டி 'கான்கிரீட் வாசல்'; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
மரத்தை வெட்டி 'கான்கிரீட் வாசல்'; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மரத்தை வெட்டி 'கான்கிரீட் வாசல்'; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மரத்தை வெட்டி 'கான்கிரீட் வாசல்'; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : மார் 06, 2025 06:20 AM

கோவை; சரவணம்பட்டி விநாயகபுரம் பகுதியில் வீட்டிற்கு முன் இருந்த மரத்தை வெட்டி, அப்புறப்படுத்திவிட்டு அங்குள்ள சாலையை ஆக்கிரமித்து, கான்கிரீட் வாசல் அமைத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கோவையில் வெயில் கொளுத்த துவங்கிவிட்டது. கொளுத்தும் வெயிலின் கொடுமையிலிருந்து தற்காத்துக்கொள்ள, ஆங்காங்கே இருக்கும் மரங்கள் நமக்கு நிழல் கொடுத்து ஆசுவாசப்படுத்துகிறது.
வெயில் மட்டுமல்ல, காற்று மாசு, சுற்றுசூழல் ஆபத்துகளிலிருந்து காப்பதோடு, நிலத்தடி நீர் மட்டத்தையும் குறையாமல் பாதுகாக்கிறது. அப்படிப்பட்ட மரங்களை மனசாட்சியே இல்லாமல் வெட்டி சாய்க்கின்றனர் சிலர்.
கோவை மாநகராட்சி வார்டு எண் 9, விநாயகபுரம், அன்னை வேளாங்கண்ணி நகர் மூன்றாவது கிராஸிலுள்ள வீடுகளுக்கு முன் இருந்த மரம், நேற்று இரவோடு இரவாக வெட்டி சாய்க்கப்பட்டது.
அதன் பின், அந்த வீட்டு உரிமையாளர் சாலையை ஆக்கிரமித்து, கான்கிரீட்டில் சரிவாக சாலை அமைத்துள்ளார். இதற்கு அன்னை வேளாங்கன்னி நகர் மக்கள் அனைவரும், கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளனர்.

