/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போத்தனுார் - உ.பி.,மாநிலம் மாவ் நகர் இடையே ரயில்கள் இன்றும் வரும் 29ம் தேதியும் இயக்கம்

ADDED : மார் 23, 2024 01:39 AM
கோவை;ஹோலி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூடுதல் நெரிசலை தவிர்க்க, கோவை போத்தனுார் - உ.பி.,மாநிலம்- மாவ் நகர் இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மாவ் நகரம், உ.பி., மாநிலத்தில் உள்ள முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகும். இந்த நகரம், அலகாபாத்- --- கோரக்பூர் முக்கிய சாலையில் அமைந்துள்ளது.
புடவை மற்றும் ஜவுளி தொழிலில், பாரம்பரியம் மிக்க நகரமாக விளங்குகிறது. மாவ் நகரத்தையும், தொழில் நகரமான கோவையையும் இணைக்கும் விதமாக, முதல் முறையாக மாவ் - போத்தனுார் இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
போத்தனுார் -- உ.பி., மாவ் (MAU) சிறப்பு ரயில் (06091), போத்தனுாரில் இருந்து 22(இன்று) மற்றும் 29 ஆகிய தேதிகளில் மாலை, 4:30 மணிக்கு புறப்பட்டு, ஞாயிறு இரவு, 10:30 மணிக்கு மாவ் ரயில்வே ஸ்டேஷன் சென்றடையும்.
உ.பி., மாவ் நகர் -- போத்தனுார் சிறப்பு ரயில் (06092) 26 மற்றும் ஏப்., 2 ஆகிய தேதிகளில் மாவ் நகர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து செவ்வாய் மாலை 6:30 மணிக்கு புறப்பட்டு, வியாழன் இரவு 11:00 மணிக்கு போத்தனுார் வந்தடையும்.
நிறுத்தங்கள்
திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லுார், ஓங்கோல், விஜயவாடா, கம்மம், வாரங்கல், சிர்பூர் காகஸ்நகர், பல்ஹர்ஷா, நாக்பூர், இடார்சி, போபால், பினா, ஜான்சி, ஓராய், கான்பூர், கோண்டா, பஸ்தி, கோரக்பூர், தியோரியா சதர், பட்னி மற்றும் பெல்தாரா சாலை ஆகிய, ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.