/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கரடிமடை மாரியம்மனுக்கு திருக்கல்யாண திருவிழா
/
கரடிமடை மாரியம்மனுக்கு திருக்கல்யாண திருவிழா
ADDED : ஏப் 29, 2024 11:44 PM
கோவை:கரடிமடை மாரியம்மன் கோவில் சித்திரைத்திருவிழா ஏப்.,21 இரவு 7:00 மணிக்கு பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
நேற்று முன் தினம் காலை 10:00 மணிக்கு கணபதிஹோமம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சென்னனுார் விநாயகர் கோவிலிலிருந்து, சாலைகள் தோறும் நீர் தடாகம் பரப்பப்பட்டது.
மூன்று கம்பத்திற்கு மஞ்சள் பூசி, மாலை அணிவித்து, சிகப்பு மஞ்சள் பட்டாடை அணிவிக்கப்பட்டது. மங்கள மேளங்கள், ஜமாப்இசை ஒலிக்க, கம்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கரடிமடை மாரியம்மன் கோவிலில் நடப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தக்குடம், பால்குடம், ஆபரணபெட்டி, கண்ணாக்கிண்டி எடுத்தல், திருக்கல்யாணம், மாவிளக்கு, வானவேடிக்கை, பொங்கலிடுதல், கயிறு வழங்குதல், எருது அழைத்தல்,மருந்து எடுத்தல், மண்மிதித்தல், எருது சாருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

