/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாகம் தீர்க்கும் மினரல் வாட்டரில் தாதுக்கள் இல்லை; டாக்டர் தகவல்
/
தாகம் தீர்க்கும் மினரல் வாட்டரில் தாதுக்கள் இல்லை; டாக்டர் தகவல்
தாகம் தீர்க்கும் மினரல் வாட்டரில் தாதுக்கள் இல்லை; டாக்டர் தகவல்
தாகம் தீர்க்கும் மினரல் வாட்டரில் தாதுக்கள் இல்லை; டாக்டர் தகவல்
ADDED : ஏப் 25, 2024 06:31 AM

முறையாக தயாரிக்கப்படாத மினரல் குடிநீரை குடிப்பதால், தாதுக்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உடல் உபாதைகள் ஏற்படலாம் என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதன் காரணமாக, குடிநீரின் தேவை அதிகரித்துள்ளது. தேவையை பூர்த்தி செய்ய, பொதுமக்கள் கேன் குடிநீரை அதிகம் பயன்படுத்த துவங்கியுள்ளனர். ஆனால், இத்தகைய கேன் குடிநீர், 'மினரல் வாட்டர்' என, விற்பனை செய்யப்படுகின்றன.
இவை உண்மையில், மினரல் வாட்டர்தானா என்றால் இல்லை. இத்தகைய மினரல் வாட்டர்களில், குடிநீரில் உள்ள கனிமங்கள் முற்றிலும் நீக்கப்பட்டு, அதில் எதுவும் இருப்பதில்லை.
இக்குடிநீரை தொடர்ந்து பருகும் போது, உடலுக்கு தேவையான கனிமங்களில் பற்றாக்குறை ஏற்படும் என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
கோவை அரசு மருத்துவமனை சமூக மருத்துவ துறை தலைவர் காளிதாஸ் கூறுகையில், ''மினரல் வாட்டர் என்றால், கனிமங்கள் நிறைந்த குடிநீர் என்பதே பொருள். கனிமங்களான மெக்னீசியம், குளோரைடு, கால்சியம், பாஸ்பேட் சிறிய அளவில் சேர்க்கப்பட வேண்டும்.
மாறாக, இத்தகைய குடிநீரில் மினரல்கள் முற்றிலும் நீக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக விற்பனை செய்யப்படுகிறது.
இந்த குடிநீரை குடிப்பதால், எந்த பயனும் இல்லை. தொடர்ந்து இந்த குடிநீரை பருகுவதால், உடலில் கனிமங்கள் குறைபாடு ஏற்பட்டு, அது தொடர்பான நோய்கள் ஏற்படலாம்,'' என்றார்.தற்போது அணைகள் வற்றி, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், மினரல் வாட்டர் கேன்கள்தான் தாகத்தை தணிக்க உதவுகின்றன. இந்நிலையில், இவற்றில் தாதுக்கள் ஏதும் இல்லை என்ற தகவல், இயற்கையாக கிடைக்கும் குடிநீரை இனி வரும் காலங்களிலாவது மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

