/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மாதந்தோறும் நடக்குது தேர்வு
/
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மாதந்தோறும் நடக்குது தேர்வு
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மாதந்தோறும் நடக்குது தேர்வு
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மாதந்தோறும் நடக்குது தேர்வு
ADDED : ஜூலை 17, 2024 04:03 PM
பொள்ளாச்சி :
பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் வாயிலாக வினாத்தாள் தயாரித்து, மாதாந்திர தேர்வு நடத்தப்படுகிறது.
அரசு பள்ளி மாணவர்கள், ஆண்டுதோறும் மாநில அளவில், தனியார் பள்ளிக்கு நிகராக தேர்ச்சி சதவீதம் பெறுகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டும் வருகிறது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொதுத்தேர்வில் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சில உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் படிப்பில் பின்தங்கிய 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் கண்டறியப்பட்டு, தனித்தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், பொதுத்தேர்வைப்போல, பள்ளி அளவில் ஆசிரியர்கள் வாயிலாக வினாத்தாள் தயாரித்து, மாதாந்திர தேர்வும் நடத்தப்படுகிறது.
பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
பள்ளிகளில், வகுப்பு ஆசிரியர்கள் வாயிலாக, படிப்பில் பின்தங்கிய மாணவியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதுடன், மாதாந்திர தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
இதற்காக, ஒவ்வொரு பாடத்திலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வினாக்கள் தயாரிக்கப்படுகிறது. தேர்வு நடத்துவதால், அவர்கள் கவனமாக படிப்பதையும், எழுதுவதையும் வழக்கமாக்கி கொள்வர். பொதுத்தேர்வை எளிதாக எதிர்கொள்வதுடன், அதிக மதிப்பெண்கள் பெறுவர்.
இவ்வாறு, கூறினர்.

