/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொன்னுாத்து அம்மன் கோவில் அருவியில் பெருக்கெடுத்த தண்ணீர்
/
பொன்னுாத்து அம்மன் கோவில் அருவியில் பெருக்கெடுத்த தண்ணீர்
பொன்னுாத்து அம்மன் கோவில் அருவியில் பெருக்கெடுத்த தண்ணீர்
பொன்னுாத்து அம்மன் கோவில் அருவியில் பெருக்கெடுத்த தண்ணீர்
ADDED : ஆக 28, 2024 02:05 AM

பெ.நா.பாளையம்;துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள பொன்னூத்தம்மன் கோவில் அருவியில் தண்ணீர் கொட்டுவதால் பக்தர்கள் நீராடி மகிழ்கின்றனர்.
துடியலூர் அருகே நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வரப்பாளையம் அருகே மலை மீது பொன்னூத்தம்மன் கோவில் உள்ளது. இங்கு நவக்கிரகம் உள்ளிட்ட சன்னதிகளும் உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்னீர்மடை, தடாகம் வட்டாரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக இங்கு உள்ள சிற்றருவியில் தற்போது தண்ணீர் கொட்டுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த அருவியில் நீராடி, மகிழ்ந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
இது குறித்து, பக்தர்கள் கூறுகையில், 'கோவிலில் ஒவ்வொரு மாதமும், அமாவாசை அன்று சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது. இது தவிர, தினசரி பூஜைகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என்றனர்.