/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீசார் பிடிக்க முயன்ற போது தப்பி ஓடிய ரவுடி கால் முறிந்தது
/
போலீசார் பிடிக்க முயன்ற போது தப்பி ஓடிய ரவுடி கால் முறிந்தது
போலீசார் பிடிக்க முயன்ற போது தப்பி ஓடிய ரவுடி கால் முறிந்தது
போலீசார் பிடிக்க முயன்ற போது தப்பி ஓடிய ரவுடி கால் முறிந்தது
ADDED : மார் 30, 2024 12:53 AM

கோவை;கோவை, கவுண்டம்பாளையத்தை அடுத்த நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 31; அதே பகுதியில் உள்ள டீக்கடையில் கேஷியர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல, கடையில் வியாபாரத்தை கவனித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், பிரபாகரனிடம் குட்கா கேட்டார். அதற்கு அவர் கடையில் குட்கா விற்பனை செய்வதில்லை என்றார். அந்த வாலிபர், கடையில் இருந்த சோடா பாட்டில்களை உடைத்தும், மேஜை நாற்காலிகளையும், பிரபாகரனின் இருசக்கர வாகனத்தையும் உடைத்து சேதப்படுத்தினார்.
பிரபாகரன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் தகராறில் ஈடுபட்டது, கவுண்டம்பாளையம் இந்திரா நகரை சேர்ந்த மதன்குமார் என்கிற அட்டு மதன், 27, என்பதும், கடந்த சில மாதங்களுக்கு முன், நண்பரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வருபவர் என்பதும் தெரிந்தது.
இந்நிலையில், கவுண்டம்பாளையம் போலீசார் ரோந்து சென்றபோது, மதனை கண்டனர். போலீசாரை பார்த்ததும் ஓடினார். அப்போது அங்குள்ள பாலத்தின் மீது ஏறிய மதன், அங்கிருந்து தவறி விழுந்தார். அதில் அவரது வலது கால் முறிந்தது.
போலீசார் அவரை கைது செய்தனர். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மதன் மீது காட்டூர், போத்தனுார், சாய்பாபாகாலனி, ரத்தினபுரி, பெரியநாயக்கன்பாளையம், துடியலுார் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உட்பட, 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரிடம் இருந்து கத்தி, அரிவாளை போலீசார் மீட்டனர்.

