/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் பிடிக்க ஓட்டம் பிடித்த பெண்கள் :அழைத்து வந்தும், கலைந்தது கூட்டம்
/
குடிநீர் பிடிக்க ஓட்டம் பிடித்த பெண்கள் :அழைத்து வந்தும், கலைந்தது கூட்டம்
குடிநீர் பிடிக்க ஓட்டம் பிடித்த பெண்கள் :அழைத்து வந்தும், கலைந்தது கூட்டம்
குடிநீர் பிடிக்க ஓட்டம் பிடித்த பெண்கள் :அழைத்து வந்தும், கலைந்தது கூட்டம்
ADDED : ஏப் 17, 2024 01:10 AM

திருப்பூர் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், திருப்பூர் தொகுதியில் இ.கம்யூ., கட்சி சார்பில், சுப்பராயன் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து, ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ நேற்று முன்தினம் இரவு, காந்தி நகரில் பிரசாரம் மேற்கொண்டார்.
இதற்காக, மாலை, 5:00 மணிக்கே வேனில் பெண்களை அழைத்து வந்த நிர்வாகிகள், கூட்டம் நடக்கும் இடத்தில் அமர வைத்தனர்.
ஆனால், இரவு, 8:00 மணியாகியும் வைகோ வரவில்லை. இதனால், சில பெண்கள் புறப்பட்டனர். அதை பார்த்த ம.தி.மு.க., நிர்வாகிகள், 'அக்கா இருங்க. எங்க போறீங்க?' என்றனர். ஆனால், அதனை யாரும் பொருட்படுத்தவில்லை.
அடுத்த சில நிமிடத்தில், காந்தி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில், வீட்டு இணைப்பில் குடிநீர் வருகிறது என கூட்டத்தில் இருந்த பெண்களுக்கு தகவல் பரவியது. அடுத்த குடிநீர் கிடைக்க, 10 நாள் காத்திருக்க வேண்மென எண்ணிய பெண்கள், குடிநீர் பிடிக்க ஓட்டம் எடுத்தனர். இதனால், ம.தி.மு.க., நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
படத்துடன் டோக்கன்
கூட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு, மாவட்ட செயலாளர் நாகராஜ் படத்துடன், 'சிறப்பு டோக்கன்' என பிரின்ட் செய்யப்பட்டு, வழங்கியிருந்தனர். இந்த டோக்கனுக்கென தனி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 'பேமென்ட் எல்லாம் இங்கில்லை. அதெல்லாம், காலையில தான்' என, அங்கிருந்தவர்கள் சில பெண்களிடம் பேசி கொண்டிருந்தனர்.

