/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'விபத்துக்கு காரணம் வாகனத்தில் கோளாறு, கவனக்குறைவு தான்': வட்டார போக்குவரத்து அலுவலர் பேச்சு
/
'விபத்துக்கு காரணம் வாகனத்தில் கோளாறு, கவனக்குறைவு தான்': வட்டார போக்குவரத்து அலுவலர் பேச்சு
'விபத்துக்கு காரணம் வாகனத்தில் கோளாறு, கவனக்குறைவு தான்': வட்டார போக்குவரத்து அலுவலர் பேச்சு
'விபத்துக்கு காரணம் வாகனத்தில் கோளாறு, கவனக்குறைவு தான்': வட்டார போக்குவரத்து அலுவலர் பேச்சு
ADDED : செப் 12, 2024 11:41 PM

சூலுார் : ' வாகனத்தில் கோளாறு, கவனக்குறைவு தான் விபத்துக்கு காரணம்' என, கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் சத்திய குமார் பேசினார்.
கோயமுத்தூர் சஹோதயா பள்ளிகள் அமைப்பு மற்றும் உயிர் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், பள்ளி வாகன டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம், பட்டணம் எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி வளாகத்தில் நடந்தது.
500க்கும் மேற்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் பங்கேற்றனர். எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன் பேசுகையில்,பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு உங்கள் கையில் உள்ளது. அதனால், வாகனங்களை விதிகளை பின்பற்றி இயக்க வேண்டும்,என்றார்.
கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார் பேசுகையில்,மாணவ, மாணவிகள் உங்கள் வாகனங்களில் தான் தினமும் பள்ளிக்கு வருகின்றனர். நீங்கள் வாகனங்களை எப்படி ஓட்டுகிறீர்கள் என, அவர்கள் கவனிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பு உங்களிடம் உள்ளது. அவர்களுக்கு ரோல் மாடலாக நீங்கள் இருக்க வேண்டும். அதனால், விபத்துகளை தவிர்க்க, விதிகளை கடைபிடியுங்கள்,என்றார்.
கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் சத்திய குமார் பேசுகையில்,இந்தியாவில் நடக்கும் சாலைவிபத்துகளில், தினமும், 426 பேர் உயிர்இழக்கின்றனர். இதன்படி, ஒரு மணி நேரத்துக்கு, சராசரியாக, 17.75 சதவீதம் பேர்உயிரிழக்கின்றனர். போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனத்தை இயக்கினால் மட்டுமே விபத்துகளை தவிர்க்க முடியும்.வாகன இயந்திரத்தில் கோளாறு, கவனக்குறைவு ஆகிய இரு காரணங்களால் தான் விபத்துகள் ஏற்படுகின்றன. அதனால், வாகனங்களை தினமும் பராமரிக்க வேண்டும். அனைத்து விதிகளையும் கடைபிடித்து, கவனமாக இயக்க வேண்டும், என்றார். நிர்வாகிகள் நவமணி, சுகுணாதேவி, நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

