/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ ஐயப்பன் கோவில் ஆண்டு விழா
/
ஸ்ரீ ஐயப்பன் கோவில் ஆண்டு விழா
ADDED : ஜூன் 10, 2024 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலூர்:காங்கயம்பாளையம் ஸ்ரீ ஐயப்பன் கோவில் ஆண்டு விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் அடுத்த காங்கயம்பாளையத்தில் உள்ள ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, 43 வது பிரதிஷ்டை தின விழா எனும் ஆண்டு விழா நேற்று நடந்தது. காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷ பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து,8:00 மணிக்கு, கலச பூஜை நடந்தது. 10:00 மணிக்கு, ஸ்ரீ ஐயப்பனுக்கு கலசாபிஷேகம் மற்றும் உச்சி கால பூஜை நடந்தது. மாலை, பகவதி சேவை, அத்தாழ பூஜை முடிந்தபின், ஹரிவராசனம் பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

