/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய தடகளப்போட்டியில் தர்மசாஸ்தா பள்ளிக்கு வெள்ளி
/
தேசிய தடகளப்போட்டியில் தர்மசாஸ்தா பள்ளிக்கு வெள்ளி
தேசிய தடகளப்போட்டியில் தர்மசாஸ்தா பள்ளிக்கு வெள்ளி
தேசிய தடகளப்போட்டியில் தர்மசாஸ்தா பள்ளிக்கு வெள்ளி
ADDED : ஏப் 23, 2024 10:36 PM

கோவை : பீகாரில் நடந்த தேசிய அளவிலான தடகளப்போட்டியில், தர்மசாஸ்தா பள்ளி மாணவி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில், பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான தடளகப்போட்டி பீகார், பாட்னாவில் நடந்தது.
இதில் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்றனர். 100மீ., 200மீ., 400மீ., 800மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பல்வேறு தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டியில், தமிழகம் சார்பில் ஸ்ரீ தர்மசாஸ்தா பள்ளியின் 11ம் வகுப்பு மாணவி பிருந்தா, உயரம் தாண்டுதலில் பங்கேற்றார். இதில் திறம்பட செயல்பட்ட பிருந்தா 1.64மீ., உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
வெற்றி பெற்ற மாணவியை, தர்மசாஸ்தா பள்ளி தாளாளர் பாலசுப்ரமணியம், துணை தலைவர் சங்கரநாராயணன், செயலாளர் சந்தோஷ், துணை செயலாளர் பிள்ளை, பொருளாளர் ரவிக்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

