/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதரவற்ற முதியவர் காப்பகத்தில் தஞ்சம்
/
ஆதரவற்ற முதியவர் காப்பகத்தில் தஞ்சம்
ADDED : பிப் 24, 2025 11:40 PM
கோவை,; கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.,ரோடு மூன்று கம்பம் பகுதியில், சாலையோரம் முதியவர் ஒருவர் ஆதரவற்று மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் விபரம், போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தெரிவிக்கப்பட்டது.
போலீசார் அந்த முதியவரை மீட்டு, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஆதரவற்றோர் தங்கும் மையத்தில் சேர்த்தனர். அங்கு உணவு வழங்கி தங்க வைக்கப்பட்டார்.
முதியவரிடம் விசாரித்த போது, தனது பெயர் பெருமாள்-; வயது 70 என்றும், தனக்கு உறவினர் யாரும் இல்லை -என்றும், பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
இப்போது முதுமை காரணமாக பிச்சை எடுக்க முடியாததால், இறுதி காலம் வரை காப்பகத்தில் தங்க வேண்டும் என, தனது விருப்பத்தை தெரிவித்தார். இப்போது அவர், நகர் நல அலுவலரின் அனுமதியுடன் முதியோர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

