/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டெங்கு ஒழிக்க துாய்மை பணியாளர்கள் உறுதிமொழி
/
டெங்கு ஒழிக்க துாய்மை பணியாளர்கள் உறுதிமொழி
ADDED : மே 16, 2024 10:40 PM
அன்னுார்;அன்னுாரில் டெங்கு கொசு பரவலை தடுக்க, கடுமையாக பணியாற்றுவோம் என, மஸ்தூர் மற்றும் தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
அன்னுார் சிறப்பு நிலை பேரூராட்சியில், டெங்கு தினத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு துப்புரவு முகாம் நடந்தது. பேரூராட்சிக்கு உட்பட்ட ராம்நகர், சாணாம்பாளையம், நாகம்மாபுதூர் ஆகிய பகுதிகளில், இந்த சிறப்பு முகாம்கள் நடந்தன.
இந்த முகாமில் டெங்கு மஸ்தூர் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் வீடு வீடாகச் சென்று, தண்ணீர் தொட்டிகளில் மருந்து ஊற்றியும், டயர் மற்றும் தேங்காய் தொட்டிகளில் தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும் உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள், உடைந்த குடங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர். இந்த சிறப்பு முகாமில் பங்கேற்ற மஸ்தூர் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் டெங்கு கொசு பரவலை ஒழிக்க கடுமையாக முயற்சி செய்வோம் என உறுதிமொழி எடுத்தனர்.
இப்பணிகளில் சுகாதார ஆய்வாளர் இனிய ராஜ், செல்வகிரி, மேற்பார்வையாளர் பிரதீப் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

