/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டட உரிமையாளர்களை அச்சுறுத்தும் நகராட்சி சிறு வியாபாரிகள் சங்கம் தீர்மானம்
/
கட்டட உரிமையாளர்களை அச்சுறுத்தும் நகராட்சி சிறு வியாபாரிகள் சங்கம் தீர்மானம்
கட்டட உரிமையாளர்களை அச்சுறுத்தும் நகராட்சி சிறு வியாபாரிகள் சங்கம் தீர்மானம்
கட்டட உரிமையாளர்களை அச்சுறுத்தும் நகராட்சி சிறு வியாபாரிகள் சங்கம் தீர்மானம்
ADDED : ஏப் 04, 2024 10:37 PM
பொள்ளாச்சி;கட்டட உரிமையாளர்களை அச்சுறுத்தும் வகையில் நகராட்சி நடவடிக்கை உள்ளது என, பொள்ளாச்சி வட்டார சிறு வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொள்ளாச்சி வட்டார சிறு வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாக கமிட்டி கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது. தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் ஹரிகிருஷ்ணன், பொருளாளர் செந்தில், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
மக்களின் அத்தியாவசிய பொருளான, பாலித்தீன் பொருட்கள் அரசால் தடை செய்யப்படாததால், பாலித்தீன் கழிவுகளை அரசு திரும்ப பெற வேண்டும். நகராட்சி கடை உரிமம் பெற கட்டணத்தை குறைக்கவும், அனைத்து வித வணிகர்களுக்கு ஒரே மாதிரி வரி விதிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகர அமைப்பு சட்டப்படி ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்ற விதி இருக்க, கடந்த, 55 ஆண்டுகளாக அதை செயல்படுத்தப்படவில்லை.
விரிவடைந்த நகரத்தில், மக்கள் தேவைக்கேற்ற வணிக வளாகங்கள் கட்டப்பட்டு நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தி அனுமதி வாங்கி இன்று தொழில் புரிந்து வரும் வணிகர்கள், கட்டட உரிமையாளர்களை அச்சுறுத்தும் வகையில் நகராட்சி நடவடிக்கை உள்ளது.
அதில் இருந்து நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான உரிமையாளர்களை காப்பாற்றிட ஒரு தொகையை அபராதம் செலுத்திடவும், மறு சீரமைப்பை வரைமுறை செய்திட அரசு முன்வர வேண்டும். இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், புதிய நிர்வாக கமிட்டி உறுப்பினராக வின்சென்ட், இணை செயலாளர் கனகராஜ், துணை தலைவராக ரசூல்தீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

