/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
/
கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : ஜூலை 13, 2024 01:40 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற, 1,150 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தல் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
குடிமை பொருள்வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை டி.எஸ்.பி., ஜனனிபிரியா மேற்பார்வையில், நேற்று நள்ளிரவு, 1:00 மணிக்குபொள்ளாச்சி ராஜா மில் ரோடுபெட்ரோல் பங்க் அருகே, போலீசார் ரோந்து சென்றனர். அங்கு, நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியை சோதனை செய்தனர்.
அதில், தமிழக அரசால் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி 1,150 கிலோ இருந்தது கண்டறியப்பட்டது. அந்த மினி லாரியை ஓட்டி வந்த பொள்ளாச்சி போடிபாளையத்தை சேர்ந்த மோகன் காளீஸ்வரன், 33, என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதி பொதுமக்களிடம், ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த மணிகண்டன் வாயிலாக கேரளாவில் கள்ள சந்தையில் அதிக விலைக்குவிற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், மினி லாரியையும், 1,150 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

