/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரே தொகுதியில் ஆயிரம் ஓட்டு மாயம்: கண்டித்து பா.ஜ.,வினர் போராட்டம்
/
ஒரே தொகுதியில் ஆயிரம் ஓட்டு மாயம்: கண்டித்து பா.ஜ.,வினர் போராட்டம்
ஒரே தொகுதியில் ஆயிரம் ஓட்டு மாயம்: கண்டித்து பா.ஜ.,வினர் போராட்டம்
ஒரே தொகுதியில் ஆயிரம் ஓட்டு மாயம்: கண்டித்து பா.ஜ.,வினர் போராட்டம்
ADDED : ஏப் 20, 2024 12:57 AM

பெ.நா.பாளையம்;கோவை லோக்சபா தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில், சுமார் ஆயிரம் ஓட்டுக்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, பா.ஜ.,வினர் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
கோவை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதி அங்கப்பா பள்ளியில், பூத் எண், 214ல் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, 1353 ஓட்டுகள் இருந்தன.
நேற்று நடந்த ஓட்டு பதிவின் போது வெறும், 523 ஓட்டுகள் மட்டுமே இருந்தன. அதாவது, 830 ஓட்டுகள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தன.
இதே போல, கவுண்டம்பாளையத்தில் ராமசாமி பள்ளியில் உள்ள பூத்தில், 150க்கும் மேற்பட்ட ஓட்டுக்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தன.
இது குறித்து, அப்பகுதியில் உள்ள பா.ஜ.,வினர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர். அவர்கள் எவ்வித பதிலும் அளிக்காததால், அங்கப்பா பள்ளி வளாகத்தில் பா.ஜ.,வினர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கவுண்டம்பாளையத்திற்கு நேரில் வந்து, அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இறுதியில், அதிக ஓட்டுக்கள் நீக்கப்பட்ட பூத்களில், மறு ஓட்டுப்பதிவு நடத்த மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்க, முடிவு செய்யப்பட்டது.
கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதி பா.ஜ., அமைப்பாளர் ப்ரீத்தி லட்சுமி கூறுகையில், குறிப்பிட்ட பூத்களில், பா.ஜ., வேட்பாளருக்கு அதிக ஓட்டு விழும் என முன்னரே தெரிந்து, குறிப்பிட்ட நபர்களை மட்டும் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர்.
இதே போல, கோவை மாநகரில் பல பூத்களில் நடந்துள்ளன. இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு, ஓட்டு போட மறு வாய்ப்பு அளிக்க வேண்டும், என்றார்.

