/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தலுக்கு பின் போராட்டம்; ஓய்வூதியர் அமைப்பு முடிவு
/
தேர்தலுக்கு பின் போராட்டம்; ஓய்வூதியர் அமைப்பு முடிவு
தேர்தலுக்கு பின் போராட்டம்; ஓய்வூதியர் அமைப்பு முடிவு
தேர்தலுக்கு பின் போராட்டம்; ஓய்வூதியர் அமைப்பு முடிவு
ADDED : ஏப் 07, 2024 10:41 PM
கோவை;''எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, தேர்தலுக்கு பின் மீண்டும் போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோர், 96 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு, 2016 ஜன., முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.
2022க்கு பின், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஊதியம் வழங்கப்படவில்லை. அகவிலைப்படி உயர்வு வழங்குவது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின், கோவை மண்டல பொது செயலாளர் செல்வராஜ் கூறுகையில், ''எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போதைக்கு எவ்வித போராட்டமும் நடத்த முடியாது. ஜனநாயக கடமையை நிறைவேற்றுவது எங்கள் கடமை. எனவே, தேர்தலுக்கு பின், எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை, போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.

