/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொட்டும் மழையில் கம்பம் நடும் விழா சூலக்கல் கோவிலில் பரவசம்
/
கொட்டும் மழையில் கம்பம் நடும் விழா சூலக்கல் கோவிலில் பரவசம்
கொட்டும் மழையில் கம்பம் நடும் விழா சூலக்கல் கோவிலில் பரவசம்
கொட்டும் மழையில் கம்பம் நடும் விழா சூலக்கல் கோவிலில் பரவசம்
ADDED : மே 23, 2024 04:47 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் கொட்டும் மழையில் கம்பம் நடும் விழா நடந்தது.
பொள்ளாச்சி, சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு தேர்த்திருவிழா, வரும், 30ம் தேதி நடக்கிறது. இதற்காக, தேர் புதுப்பிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.
கடந்த, 13ம் தேதி, திருத்தேர் முகூர்த்தக்கால் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. நேற்றுமுன்தினம், இரவு, 9:00 மணிக்கு, கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, கனமழை பெய்த நிலையில், பக்தர்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றியும், பூவோடு எடுத்தும் அம்மனை வழிபட்டனர்.
விழாவை முன்னிட்டு, இன்று முதல், 28ம் தேதி வரை, காலை மற்றும் மாலை நேரங்களில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவின் தொடர்ச்சியாக, வரும், 29ல், காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு பூஜையும், இரவு, 7:00 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
வரும், 30ம் தேதி, திருத்தேர் வடம் பிடித்தல் துவங்கி, ஜூன் 1ம் தேதி, திருத்தேர் நிலைக்கு வருகிறது. மூன்று நாட்கள் தேரோட்டம் நடப்பதால், சுற்றுப்பகுதி கிராம மக்கள் கோவிலுக்கு வருகை புரிந்து, அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

