/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குரங்கு அம்மைக்கு 'நோ என்ட்ரீ' கோவையில் ஏற்பாடுகள் தீவிரம்
/
குரங்கு அம்மைக்கு 'நோ என்ட்ரீ' கோவையில் ஏற்பாடுகள் தீவிரம்
குரங்கு அம்மைக்கு 'நோ என்ட்ரீ' கோவையில் ஏற்பாடுகள் தீவிரம்
குரங்கு அம்மைக்கு 'நோ என்ட்ரீ' கோவையில் ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : ஆக 23, 2024 01:34 AM
கோவை;தமிழகத்தில் குரங்கம்மை தொற்று நோய் பாதிப்பு இதுவரையில் இல்லை என்றாலும், பொது சுகாதாரத் துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றனர்.
அதன்படி, கோவை மாவட்ட சுகாதாரத்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதவாது:
உலக சுகாதார நிறுவனம், ஆக., 14ம் தேதி, குரங்கு அம்மை நோயை பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் அதன் அருகாமையிலுள்ள நாடுகளில் இந்நோய் பரவி வருகிறது.
இந்நோய் தாக்கம் ஏற்பட்டால் தோலில் தடிப்புகளுடன் இரண்டு முதல் நான்கு வாரங்கள் தொடர் காய்ச்சல், தலைவலி, தசை வலி முதுகு வலி, சோர்வு மற்றும் கழுத்தில் நெறி கட்டுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். இந்நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களை தொடுவதால் நோய் தொற்று ஏற்படுகிறது.
கோவை பன்னாட்டு விமான நிலையத்தில், வெளிநாட்டு பயணிகளை பரிசோதனை செய்து கண்காணிக்க டாக்டர், சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். குரங்கு அம்மை நோய் பற்றிய அரசு வழிகாட்டி நெறிமுறைகள், தனியார் டாக்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை நோய் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் மாவட்ட சுகாதார அலுவலருக்கு தெரியப்படுத்த கேட்டுக்கொள்ளபட்டுள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
சிறப்பு வார்டு 'ரெடி'
“வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறி தென்பட்டால் உடனே தகுந்த சிகிச்சை அளிக்க, கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை நுழைவுவாயிலில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் (ரெட் ஜோன்), 10 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு டாக்டர்கள், நர்சுகள், தேவையான மருந்து, மாத்திரைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
- நிர்மலா, டீன்,
கோவை அரசு மருத்துவமனை

