/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையில் குளம் போல் தேங்கும் மழைநீர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை
/
சாலையில் குளம் போல் தேங்கும் மழைநீர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை
சாலையில் குளம் போல் தேங்கும் மழைநீர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை
சாலையில் குளம் போல் தேங்கும் மழைநீர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை
ADDED : ஜூலை 24, 2024 12:37 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், கடந்த இரு வாரகாலமாக, பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆனால், பெரும்பாலான சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வடிகால் அமைக்கப்படாததால், மழைநீர் தேக்கமடைகிறது.
மேலும், பாதாள சாக்கடைகளில் மழை நீர் புகுந்து, ஆங்காங்கே கழிவுநீர் வெளியேறி சுகாதாரம் பாதிக்கிறது. குறிப்பாக, மழையின்போது, பொள்ளாச்சி அருகே என்.ஜி.எம்., கல்லுாரி நுழைவுவாயில் முன்பாக, நெடுஞ்சாலையில் தண்ணீர் தேக்கமடைவது, தொடர் கதையாக உள்ளது.
நேற்று மாலை, கனமழை நீடித்த நிலையில் மேம்பாலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வழிந்தோடிய நீர், சாலையில் குளம்போல் தேங்கி நின்றது. இதனால், கல்லுாரியில் இருந்து வெளியேறிய மாணவ, மாணவியர் சாலையை கடக்க முடியாமல் திணறினர்.
மேலும், வாகனங்கள் வேகமாக கடந்து சென்ற போது, தண்ணீர் சிதறடிக்கப்பட்டதால், அவ்வழியே சென்ற இரு சக்கர வாகன ஓட்டுநர்கள், சாலையோர கடைக்காரர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
மக்கள் கூறியதாவது:
விரிவுபடுத்தப்பட்ட நெடுஞ்சாலையில், சென்டர்மீடியன் அமைக்கப்பட்டும் முறையாக வடிகால் ஏற்படுத்தப்படவில்லை. அவ்வபோது பெய்யும் மழைநீருடன் கழிவுகளும் கலந்து தேக்கம் அடைவதால், மக்கள் பாதிக்கின்றனர்.
இது குறித்து, நெடுஞ்சாலைத்துறையினருக்கு பலமுறை புகார் தெரிவித்தும் தீர்வு காணப்படாமல் உள்ளது. மழைநீர் வெளியேறாமல் தேங்குவதால், மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சாலையை உயரப்படுத்தி, மழை நீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்போது தான் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

