/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பல தோல்விகள் ஏற்பட்டால் மனம் இன்னும் பலமாகும்'
/
'பல தோல்விகள் ஏற்பட்டால் மனம் இன்னும் பலமாகும்'
ADDED : மார் 28, 2024 04:23 AM

தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், ஆண்டு விளையாட்டு விழா போட்டிகள் நேற்று நடந்தன. இவ்விழாவிற்கு, கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார்.
விளையாட்டுத்துறை இயக்குனர் கவுசல்யா தேவி வரவேற்பு உரையாற்றினர். இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கோவை அரசு கலை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் விஜயகுமார் பேசுகையில், முதல் வெற்றி அதிர்ஷ்டத்தில் கிடைத்தது என்று, யார் சொன்னாலும் நீங்கள் நம்ப வேண்டாம். திறமை இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்டம் ஒரு முறை மட்டுமே நம்மை காப்பாற்றும். பல தோல்விகள் ஏற்பட்டால் நம் மனம் இன்னும் பலமாகும் என்பதை நம்புங்கள்.
ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் வைராக்கியம் கொள்ளுங்கள். அப்போதுதான் அதன் வெற்றி உங்கள் வசமாகும். உடல் ஆரோக்கியத்திற்கு, உடல் உழைப்பு, உடற்பயிற்சி, யோகா ஆகிய மூன்றும் இருந்தால், உங்கள் வாழ்வின் இறுதி வரை, சர்க்கரை நோய் உங்களை தொட்டு பார்க்காது,என்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற, மாணவ மாணவியருக்கு அவர் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.

