ADDED : ஏப் 21, 2024 10:33 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் ஜெயின் சங்கத்தின் சார்பில், மகாவீர் ஜெயந்தி ஆண்டு விழா மற்றும் ஊர்வலம் நடந்தது.
ஜெயின் கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஜெயின் சங்கத் தலைவர் சுரேஷ் நஹார் தலைமை வகித்து, கொடியசைத்து, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பொருளாளர் சஞ்சய் சாங்லா முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் மூத்த நிர்வாகிகள், முன்னாள் தலைவர்கள், யுவா சங்கம், மகிளா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மகாவீரரின் கருத்துக்களையும், போதனைகளையும் விளக்கும் பதாகைகளை, கையில் ஏந்தி ஊர்வலத்தில் சென்றனர். ஊர்வலம் சாய்ராம் மஹாலை அடைந்தது. அங்கு நடந்த கூட்டத்திற்கு ஜெயின் சாத்வி சுதா கவர் தலைமை வகித்தார். சாதுவிக்கள் மகாவீரரின் போதனைகளை விளக்கி கூறி, ஆசீர்வாதம் வழங்கினர்.
காரமடை அருகே கோசாலையில் உள்ள மாடுகளுக்கு, தீவனங்களும், முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகளும், ஜெயின் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டன. ஊட்டி சாலையில், பொதுமக்களின் தாகம் தீர்க்க, நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் நவரத்தன் மல் சாங்லா, மிட்டாலால் துகர் உட்பட பலர் பங்கேற்றனர். செயலாளர் ரமேஷ் சந்த் சாங்லா நன்றி கூறினார்.

