/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூதாட்டி கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை
/
மூதாட்டி கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை
ADDED : மார் 28, 2024 12:35 AM
கோவை,:கோவை மாவட்டம், ஆனைமலை அருகேயுள்ள கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி, 48. இவரது நடத்தை சரியில்லாததால், மனைவி பிரிந்து சென்றார். இதனால் தோட்டத்தில் தங்கியிருந்து, டிரில்லிங் மெஷின் வேலை செய்து வந்தார்.
அதே பகுதியிலுள்ள கணபதிபுதுார், தோட்டத்து வீட்டில் 80 வயது மூதாட்டி மற்றும்அவரது மகள், மருமகன் வசித்தனர். பக்கத்து தோட்டம் என்பதால், மூதாட்டி வீட்டிற்கு பொன்னுச்சாமி அடிக்கடி சென்று வந்தார்.
இந்நிலையில், 2021, செப்., 16ல், குடிபோதையில் சென்ற பொன்னுச்சாமி, மூதாட்டி தனியாக இருந்ததை பயன்படுத்தி, அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். பின், அவர் கழுத்தை நெரித்து, கொலை செய்து தப்பினார். ஆனைமலை போலீசார், பொன்னுச்சாமியை கைது செய்தனர்.
கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, வழக்கை விசாரித்து, பொன்னுச்சாமிக்கு ஆயுள்சிறை, 1,500 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

