/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரும் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யலாம்
/
வரும் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யலாம்
ADDED : மே 23, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை எதிர்பார்க்கப்படுவதாக, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
விவசாயிகள் அதிகப்படியான மழை நீரை, பண்ணைகுட்டைகளில் சேமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மழை எதிர்பார்க்கப்படுவதால் நீர்பாசனம், விதைப்பு, உரமிடல், மற்றும் மருந்து தெளிப்பை உறுதிசெய்ய வேண்டும்.
நெல் விதைப்பு செய்யாத விவாயிகள், விதைப்பை ஒத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் பகுதிகளில், சுழற்காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், கரும்பு மற்றும் வாழை விவசாயிகள், உரிய முன்னெச்சரிக்கை செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

