/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிக்னல் குறைகளை கண்டறிய மலை ரயில் பாதையில் ஆய்வு
/
சிக்னல் குறைகளை கண்டறிய மலை ரயில் பாதையில் ஆய்வு
ADDED : மார் 24, 2024 05:38 AM

குன்னூர் : குன்னூருக்கு சிறப்பு ரயிலில் வருகை தந்த முதன்மை தலைமை சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர் குன்னூர், ஊட்டி மலை ரயில் நிலையங்களை ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும், மலை ரயிலில் சர்வதேச சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். மலை ரயில் பாதையில் சிக்னல்கள் ஆய்வு மேற்கொள்ள நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சிறப்பு மலை ரயிலில் தென்னக ரயில்வே முதன்மை தலைமை சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர் ஷைலேஷ் குமார் திவாரி வருகை தந்தார். மலை ரயில் பாதையில் உள்ள சிக்னல்கள், குன்னூர் ரயில் நிலையத்தில் சிக்னல் அறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, கார் மூலம் ஊட்டி மலை ரயில் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சிக்னல்களில் உள்ள பாதிப்புகள் சீரமைப்பு மற்றும் சிக்னல்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

