/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்சி வேட்பாளர் பெயரில் களமிறங்கிய சுயேட்சைகள் குழப்பம் ஏற்படுத்த முயற்சி
/
கட்சி வேட்பாளர் பெயரில் களமிறங்கிய சுயேட்சைகள் குழப்பம் ஏற்படுத்த முயற்சி
கட்சி வேட்பாளர் பெயரில் களமிறங்கிய சுயேட்சைகள் குழப்பம் ஏற்படுத்த முயற்சி
கட்சி வேட்பாளர் பெயரில் களமிறங்கிய சுயேட்சைகள் குழப்பம் ஏற்படுத்த முயற்சி
ADDED : மார் 28, 2024 05:38 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதி வேட்புமனுத்தாக்கல் கடந்த, 20ம் தேதி முதல் துவங்கி நேற்று வரை நடந்தது.கடைசி நாளான நேற்று, பா.ஜ., - 3, பா.ஜ., மாற்று வேட்பாளர் - 1, சுயே., - 12, தி.மு.க., மாற்று வேட்பாளர் - 1 என மொத்தம், 17 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
கடந்த, 20ம் தேதி முதல், நேற்று வரை பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், 31 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.கோவை மாவட்ட வருவாய் அலுவலகம், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் இதுவரை, 44 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. வரும், 30ம் தேதி வேட்புமனு திரும்ப பெறலாம்.
ஒரே பெயரில்...
அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேயன் பெயரில், நான்கு சுயேட்சைகள் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமி பெயரில், ஒரு சுயே., வேட்பாளர் மனுத்தாக்கல் செய்தார்.
மேலும், ஈஸ்வரன், வசந்தகுமார் என்ற பெயர்களிலும் சுயே., வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர் கலகல
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் சுயே., வேட்பாளர் மனுத்தாக்கல் செய்ய வந்தார். அப்போது, அங்கிருந்த போலீசாரிடம் மனுத்தாக்கல் செய்ய வந்ததாக அவர் தெரிவித்தார். சுயேட்சையாக தாக்கல் செய்கிறீர்களா என கேட்ட போது, நாங்க தி.மு.க., தான்; சுயேட்சையாக கார்த்திகேயன் பெயரில் மனுத்தாக்கல் செய்ய வந்ததாக தெரிவித்தார். அதன்பின், அவரை போலீசார் அனுமதித்தனர்.

