/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிகரித்து வரும் குழந்தை திருமணம் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தணும்
/
அதிகரித்து வரும் குழந்தை திருமணம் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தணும்
அதிகரித்து வரும் குழந்தை திருமணம் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தணும்
அதிகரித்து வரும் குழந்தை திருமணம் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தணும்
ADDED : மே 24, 2024 10:51 PM
உடுமலை : பள்ளி செல்லும் வயதில் வளர் இளம் பருவத்தினர் குடும்பச்சூழல், குடும்பத்தினரின் கட்டாயம், தவறான வழிநடத்துதல் உட்பட பல காரணங்களால், குழந்தை திருமணம் செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு, சைல்டு லைன், சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்ட துறைகள் செயல்படுகின்றன.
இருப்பினும், திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டு தோறும் குழந்தை திருமணங்கள் குறையாமல் உள்ளது. மாநில அளவில் வளர் இளம் பருவத்தில், பிரசவிக்கும் பெண் களின் எண்ணிக்கை அதிகரிக்கும் மாவட்டத்தில் திருப்பூரும் முதன்மையாக உள்ளது.
மாவட்ட அளவில், உடுமலையில் கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே, 15க்கும் அதிகமான குழந்தை திருமணங்கள் பதிவாகியுள்ளன. மாவட்ட அளவில் இவ்வாறு குழந்தை திருமணம் செய்யப்பட்டவர்கள், தடுத்து நிறுத்தப்பட்டவர்களின் தற்போதைய நிலை குறித்து, அலுவலர்கள் நேரடியாக விசாரானை நடத்துகின்றனர்.
குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை சமர்ப்பிக்க, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஊராட்சிகளில் விழிப்புணர்வு இல்லை
குழந்தைகள் பாதுகாப்பு குழு என, ஊராட்சிகளில் அமைக்கப்பட வேண்டும். இதன் வாயிலாக, வளர்இளம் பருவத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஆனால் இத்தகைய குழந்தைகள் பாதுகாப்பு குழு ஊராட்சி அளவில் செயல்படுவதில்லை.
வளர் இளம் பருவத்தினருக்கு, உளவியல் ரீதியான ஆலோசனை வழங்குவதற்கும் முறையான எந்த திட்டமும் இல்லை.
இதனால் கல்வி இடைநிற்றல், குழந்தை திருமணம், தவறான வழிகளில் செல்வது என பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
குழந்தை திருமணத்தை தடுப்பதற்கு, பள்ளிக்கல்விதுறையும் தீவிரம் காட்ட வேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

